வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் மீண்டும் ப்ளு டிக்

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்த ‘ப்ளு டிக்’வசதி திடீரென நீக்கப்பட்ட நிலையில் மீண்டும்  ‘ப்ளு டிக்’ கொடுக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் தளங்களை பயன்படுத்தும் பிரபலங்கள் மற்றும் பிரபலமான நிறுவனங்களின் ஐடியை உறுதிப்படுத்துவதற்கு அடையாளமாக ‘ப்ளு டிக்’ வசதியை அந்நிறுவனம் வழங்குகிறது.

இந்த ‘ப்ளூ டிக்-கை’ சிலர் பெருமையாக கருதுகின்றனர். சில காரணங்களுக்காக 2017-ம் ஆண்டு இந்த ப்ளூ டிக் வெரிபிகேஷனை ட்விட்டர் நிறுத்தியிருந்தது. இந்தாண்டு மீண்டும் இந்த வசதியை மீண்டும் கொண்டு வந்தது. இந்திய குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை வைத்திருக்கிறார். அதேபோல் இந்திய குடியரசுத் துணைத் தலைவருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தையும் வெங்கையா நாயுடு பயன்படுத்தி வருகிறார்.

ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கு இடையே போட்டி நிலவுகிறதா, எதன் அடிப்படையில் ப்ளு டிக்கை நீக்கினீர்கள். விளக்கம் வேண்டும் என ட்விட்டர் வாசிகள் ட்வீட் செய்யத்தொடங்கினர். சிலரோ ட்விட்டர் நைஜீரியா அதிபரின் ட்வீட்-டை டெலிட் செய்தது. அவர் ட்விட்டரையே டெலிட் செய்துவிட்டார் என கமெண்ட் செய்திருந்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ட்விட்டர் மீண்டும் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிற்கு ‘ப்ளு டிக்’ வசதியை கொடுத்துள்ளது.