பரவும் பறவைக் காய்ச்சல் தொற்று !

A farmer veterinary walks inside a poultry farm

ராஜஸ்தான் மாநிலத்தில் வேகமாகப் பறவைக் காய்ச்சல் பரவுவதாக மக்கள் அச்சம் அடைகின்றனர். அங்கு 200-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தங்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, கோழி உள்ளிட்ட அசைவ உணவுகள் உண்பதையும் தவிர்த்துவருகின்றனர்.

மேலும் , உயிரிழந்த பறவைகளின் சடலங்களை ஆய்விற்காக அம்மாநில அரசு போபாலுக்கு அனுப்பியுள்ளது. மற்றும் தற்போது கேரளாவில் இரண்டு பகுதிகளில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள பறவைக் காய்ச்சல் பற்றி பேசிய விலங்குகள் நலத் துறை அமைச்சர் கே. ராஜு, கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தின் நீன்டூர் பகுதியிலும், ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு பகுதியிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்த நோய் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம் என்றார்.