bipin rawat : பல்கலைகழகத்திற்கு பிபின் ராவத் பெயர் !

bipin rawat
பிபின் ராவத்

இந்திய ஆயுதப்படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் ப அவர்கள் பயணம் செய்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மறைந்தனர்.

தமிழகத்தில் புதன்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் நடைபெற்றது.

ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதிச் சடங்குகளை அவரது மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி செய்தனர்.தமிழ்நாட்டின் குன்னூர் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஜெனரல் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப்படை வீரர்களுடன் புதன்கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில் பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட்டில் அவரது நினைவாக புதிதாக கட்டிவரும் பல்கலைகழகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என சட்டமன்றத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது . இதற்கு பல சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் பல்கலைகழகத்திற்கு அவரது பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.