பீஹார் தேர்தல்: இன்று பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியீடு

பீஹார் சட்டசபை தேர்தலையொட்டி இன்று(அக்.,22) மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பா.ஜ. தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின், 243 சட்டசபை தொகுதிகளுக்கு, மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 28, நவ., 3 மற்றும் 7ம் தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. நவ., 10ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீஹாரில், முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி, பா.ஜ. வுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் பா.ஜ. தேர்தல் அறிக்கையை இன்று மத்திய அமைச்ர் நிர்மலா சீத்தாராமன் வெளியிடுகிறார்.