பிரேசிலில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர் மரணம்

பிரேசிலில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ரா செனிகா ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை பிரேசிலில் சோதனை அடிப்படையில் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டது.

அதில் ஒருவர் திடீரென உயிரிழந்ததால், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர் இறப்புக்கான சரியான காரணம் குறித்தும் தன்னார்வலர் எந்த அளவிலான தடுப்பூசி சோதனையை எடுத்துக்கொண்டார் என்பது குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. மேலும், தடுப்பூசி சோதனை தடையின்றி தற்போதும் வழக்கம்போல் தொடர்ந்து வருகின்றன.