பாலியல் அத்துமீறல்: பெண்களின் ஆடைகளைத் துவைக்க வேண்டும்

பீகார் மாநிலம் மதுன்பானியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெண் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி இளைஞர் நீதிமன்றத்தை நாடினார். அவரது மனுவை நீதிமன்றம் விசாரித்தப்போது, ஜாமீன் வழங்க போலீசார் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது வழக்கு தொடர்ந்த இளைஞர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் சம்பந்தப்பட்டவர் குறைந்த வயதுடையவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஐநாஷ்குமார் வித்தியாசமான தீர்ப்பளித்தார். அதாவது, இளம் வயது என்பதால் குற்றம் செய்ய அனுமதிக்க முடியாது. ஆனாலும் அவருடைய வயதை கருதி ஜாமீனில் விடுதலை செய்கிறோம். ஆனால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் அவர் 6 மாதத்துக்கு துவைத்து அயர்ன் செய்து வழங்க வேண்டும் என்று நீபந்தனை வித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மோசமாக முடி வெட்டியதால் மவுரியா நட்சத்திர விடுதிக்கு ரூ.2 கோடி அபராதம்