பிக் பாஸ் புகழ் ஆஜித் க்கு கரோனா தொற்று !

கடந்த வருடம் விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் ஆஜித்.மேலும் விஜய் டிவி யில் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான கேப்ரில்லாவுடன் சேர்ந்து நடனமாடி வந்தார்.

கேப்ரில்லாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவருடன் நடனமாடி வந்த ஆஜித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனது சமூகவலைத்தளமான இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர்,எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடைய உடல்நிலை சீராகவே உள்ளது. உங்களுடைய பிரார்த்தனைக்கு நன்றி. அனைவரும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வீட்டை விட்டு வெளியே சென்று வரவும் என்று ஆஜித் தெரிவித்துள்ளார்.