பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவர் தனா..!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் குறித்து தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியான முறையில் பிக்பாஸ் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறு சிறு பிரச்சினைகளை தவிர வேறு ஒன்றுமில்லை.

அதே சமயம் போட்டியாளர்களின் வாழ்க்கை குறித்த சோகமான பயணங்களை தினந்தோறும் பகிர்ந்து வந்தனர். இதில் பவானி ரெட்டி, தாமரைச்செல்வி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பவானி ரெட்டி மற்றும் தாமரைச்செல்வியை தவிர மற்ற 15 போட்டியாளர்களும் நாமினேஷின் பட்டியலில் உள்ளனர். இதனால் மீதமுள்ள 15 போட்டியாளர்களில் யார் எலிமினேஷனில் வெளியேறுவார் என்ற பரபரப்பு பிக்பாஸ் வீட்டில் நிலவி வருகிறது.

அதேநேரம் பொதுமக்களிடம் போட்டியாளர்கள் குறித்து இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

இந்த வாக்கெடுப்பில் அபினவ், ஸ்ருதி, சின்னப்பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய நால்வரும் குறைந்த வாக்குகள் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் அபிஷேக் ராஜா மற்றும் சின்னப்பொண்ணு மிகமிக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இந்த இருவரில் ஒருவர்தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட உள்ளார்.

பிக்பாஸின் கடந்த சீசன்களில் வயதான போட்டியாளர் ஒருவர்தான் முதலில் வெளியேற்றப்படுவார். அதை வைத்து பார்க்கும்போது சின்னப்பொண்ணு, வெளியேற வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.