நம் உணவில் தினமும் பயன்படுத்தும் கருவேப்பில்லையில் இருக்கும் மருத்துவ குணங்கள் !

கறிவேப்பிலை என்பது நம் இந்திய சமையலில் தினமும் சமைக்கக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்களிலும் சேர்ப்பது வழக்கம்.கறிவேப்பிலை என்பது வாசனைக்காக மட்டுமே உபயோகிக்க கூடிய பொருள் என்பது மட்டும்மில்லாமல் இதில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.

முடியின் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவும். தினமும் கறிவேப்பிலை உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு நரைமுடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினை ஏற்படாது.மேலும் வாரம் ஒரு முறை கறிவேப்பிலை ஜீஸ் செய்து குடித்து வர தலைமுடி பிரச்சனை உங்களுக்கு இருக்காது.

இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிக முக்கியம்.இதை சாப்பிடுவதில் மூலம் நமக்கு ஆரோக்கியம் மேம்படும்.

இந்த கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ போன்ற சத்துகளும் நிறைந்து காணப்படுகிறது. இதில் அதிகமான இரும்புச் சத்தும் மற்றும் போலிக் ஆசிட் இருக்கிறது. இவை இரண்டும் அதிகமாக இருக்கும் பொழுது இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் குறைந்து விடும்.