சிகப்பான சருமத்தை விட பொலிவான சருமமே சிறந்தது !

சிகப்பான சருமம் தான் அழகு என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது.இப்போது அனைவரும் பொலிவான சருமத்தையே விரும்புகிறார்கள் .சினிமா மற்றும் விளம்பர துறைகளில் டஸ்கி ஸ்கின் டோனை இப்போது மிகவும் வரவேட்கிறார்கள்.நமது சருமம் எந்த கலர் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அது பொலிவாக இருந்தால் போதும்.

பொலிவான சருமம் பெற இதை ட்ரை பண்ணுங்க.முகத்தில் சரும பிரச்சனைகள் இருப்பவர்கள் ஃபேஸ் பேக் போட பயன்படுத்தினால் காய்கறிகளை உபயோகிக்கலாம்.தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களால் சரும ஆரோக்கியம் மேம்படும்.பீட்ரூட்டை தோல் சீவி அரைத்து கெட்டித்தயிர் சேர்த்து முகம், மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி வேண்டும்.

பூசணிக்காயை தோல் நீக்கி அதை மிக்ஸியில் நன்றாக அடிக்கவும் அதில் தேன், தயிர் கலந்து முகத்தில் தடவவும்.முட்டையின் வெள்ளைக்கருவை வெள்ளரிக்காய் விழுதுடன் சேர்த்து நன்றாக கலக்கி பிறகு முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவ வேண்டும்.இப்படி செய்தல் பொலிவான சருமம் பெறலாம் .