Exam: பிஇ, பிடெக் செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு!

பிஇ, பிடெக் செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்த இருக்கும் நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியாகி இருக்கிறது.

Exam: தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்த இருக்கும் நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியாகி இருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. தமிழகத்திலும் மூன்றாம் அலை தாக்கம் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த வார இறுதி வரை விடுமுறை விடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு குறித்த அட்டவணை வெளியாகி உள்ளது. பிஇ பி.டெக் படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி, பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 1 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும், மாணவர்கள் தேர்வுகள் எழுதி விடைத்தாள்களை வாட்ஸ்ஆப் மற்றும் ஈமெயில் மூலமாக அனுப்ப வேண்டும்.

மேலும் விடை எழுதிய ஒரிஜினல் தாள்களை அந்தந்த கல்லூரிகளில் மாணவர்கள் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு விடைகளும் ஓரே மாதிரி இருந்தால் மட்டுமே தேர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெற கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற இருந்தது தற்போது அது மாற்றப்பட்டு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடியாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உங்கள் தொழிலையே விளம்பரம் செய்ய விரும்பினால் 9944184549 என்ற நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: 1 – 12 வரை மீண்டும் பள்ளிகள் திறப்பு