சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்- கமல்

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பட்ஜெட் மீதான விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, சட்டசபை நேரடி ஒளிபரப்பு நாளை முதலாவது துவங்க தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.