விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்கும் வேலையை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம்- அனுராக் தாகூர்

பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்கும் கடினமான வேலையை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம். நாங்கள் அதை செய்வோம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட இந்த அரசில் வேளாண் உற்பத்தி பொருட்கள் கொள்முதல் அதிகரித்து இருக்கிறது.

வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கத்தான் மத்திய பட்ஜெட்டில் வேளாண்மை செஸ் (கூடுதல் வரி) விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்காகவே நாங்கள் பாடுபடுகிறோம் என அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.