இங்கிலாந்தில் புதியவகை கரோனா தொற்றால் மீண்டும் ஊரடங்கு !

இங்கிலாந்தில் நாட்டில் உருமாறிய புதியவகை கரோனா தொற்று பரவல் காரணமாக, ஜூலை மாதம் 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

உருமாறிய புதியவகை தோற்றால் அந்நாட்டில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்தன.மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர் முதலில் 10 நாட்கள் தனிமைபடுத்தலில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும், புதிய தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். எனவே, தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை வரை ஊரடங்கை தளர்த்துவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.