இனி கோவில்களில் மொட்டையடிக்க கட்டணமில்லை !

தமிழக கோவில்களில் மொட்டையடித்தால் இனி கட்டணம் இல்லை என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர்சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திருவருட்பிரகாச வள்ளலார் புகழைப் போற்றும் வகையில் வள்ளலார் சர்வதேச மையம் வடலூரில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சூரிய ஒளி வெப்ப விளக்குகள் தேவைப்படும் அனைத்து கோயில்களிலும் பொருத்தப்படும்.திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்களில் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.தமிழர் திருநாளாம் தைத்திருநாள் இல் 10 கோடி ரூபாய் செலவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்படும்.

மேலும் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் திருமணம் நடத்த கட்டணம் இல்லை என்றும் அறிவித்துள்ளார்.