மாணவர்கள் கவனத்திற்கு..வெளியானது அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் !

கொரோனா தொற்றின் 2 ம் அலை காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன.அணைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.இந்நிலையில்,அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட வேண்டிய பருவத் தேர்வுகள் கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

மேலும் மாணவர்களின் நலன் கருதி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைன் முறையில் நடைபெற்றன.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான 2020ம் ஆண்டுக்கான நவம்பர், டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டுக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

தேர்வு முடிவுகளை அண்ணாப் பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.