அன்புமணி ராமதாஸ் மகளின் திருமண வரவேற்பு கொண்டாட்டம் !

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.இவரது மகள் சங்கமித்ராவுக்கும் சில தினங்களுக்கு முன்னர் சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன், கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜிக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில்,இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.இவர்களது வரவேற்பிற்கு தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநில ஆளுநரான பன்வாரிலால் புரோகித் வாழ்த்தினர்.

மேலும் இந்த வரவேற்பிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி,கனிமொழி,தயாநிதி மாறன்,உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் இந்த வரவேற்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு,நடிகர் சந்தானம் ஆகியோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதையும் படிங்க: பெண்கள் மட்டுமே செயல்படும் ஓலா தொழிற்சாலை