இந்தியாவின் செஸ் ஜாம்பவன் விஸ்வநாதன் ஆனந்த், வெஸ்ட் பிரிஜ் அமைப்புடன் இணைந்து செஸ் அகாடமி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
வெஸ்ட் பிரிட்ஜ் – ஆனந்த் செஸ் அகாடமி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அகடாமியில் இந்தியாவின் தலைசிறந்த ஐந்து செஸ் வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளில் செஸ் விளையாட்டில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் பல வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தால் அவர்கள், சர்வதேச செஸ் விளையாட்டு தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறுவதற்கும், உலக சாம்பியன்களாக மாறவும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.


