மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் வேளையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார்.
அங்கு அவர் முதலில் விவேகானந்தர் இல்லத்திற்குச் சென்றார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் மக்களால் கவரப்பட்ட விவேகானந்தர் இல்லத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.அதன்பிறகு, அவர் மிட்னாப்பூர் சென்றார். அங்கு பாஸ்சிம் கிராமத்திற்குச் சென்று சுதந்திரப் போராட்டத் தியாகி குடிராம் போஸ் இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் அவரது வாரிசுகளுக்குச் சால்வை போர்த்திக் கவுரவித்தார். தொடர்ந்து இன்று மிட்னாப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார். அப்போது திரிணாமுல் கட்சியில் இருந்து விலகியவர்கள் பலரும் பாஜகவில் இணையவுள்ளனர். நாளை அவர் போல்பூர் சென்று அங்கு நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.



