தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா!

தமிழ்நாட்டில் பாஜக நடத்தி வரும் வேல் யாத்திரையால் அதிமுக – பாஜக கூட்டணி இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் முரணான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக வேல் யாத்திரை நடத்தி வருவதற்கு இடையே அமித்ஷா சென்னை வருவது முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகின்றது. தமிழ்நாடு வரும் அமித் ஷா, அதிமுக தரப்பினரைச் சந்தித்து ஆலோசனை நடத்துவாரா என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.