வருகின்ற 20ஆம் தேதி ஜோ பைடனின் பதவியேற்பு விழா

ஜனவரி 20 ஆம் தேதி ஜோ பைடனின் பதவியேற்பு விழா நடக்கவுள்ள நிலையில், வாஷிங்டனில் தேசிய காவலர் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களின் பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் வந்திறங்கியுள்ளனர்.

பதவியேற்பைப் பாதுகாக்கும் சேவை உறுப்பினர்களிடமிருந்தே உள் தாக்குதல் அல்லது பிற அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அமெரிக்க (America) பாதுகாப்பு அதிகாரிகள் கவலைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை நடக்கவிருக்கும் அடுத்த அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக மற்ற மாநில தலைநகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், “உள் தாக்குதல்” அறிக்கைகளுக்கு மத்தியில் FBI தேசிய காவல்படையினரை சோதனை செய்து வருகிறது.