education news : சுழற்சி முறை வகுப்புகள் !

cbse-term-1-results-2021-important-announcement-about-result-date
CBSE பருவம் 1 முடிவுகள் 2021

education news : கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.தற்போது இந்த மூன்றாம் அலையில் பரவலை தடுக்க வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில்,இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கிட்டத்தட்ட 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.கடந்த செப்டம்பர் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று நேரடி வகுப்புகள் நடைபெற்றன.education news

தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.தற்போது தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது தற்போது மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிக மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க : national news : பட்ஜெட் மூலம் இந்த 4 துறைகளின் பங்குகளில் ஏற்றத்தை காணலாம் !