தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருப்பதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் ,நேற்று தமிழ்நாடு முழுவதும் 11 ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றிக்கை வெளியிட்டுள்ளது.அதில் ,அனைத்து வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.
மேலும் 27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களுடன் பிற ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் வர வேண்டும்.
கொரோனா தொற்று குறைந்த பிறகு, 11 மாவட்டங்களில் மாணவ்கள் சேர்க்கை நடைபெறும். ஆசிரியர்கள் பள்ளிகளுக்க வருவதற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் சேர்க்கை விவரம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



