பாகிஸ்தான் விமான வடிவில் பலூன் !

ஜம்மு காஷ்மீர் கிராமம் ஒன்றில் விமானம் வடிவில் பலூன் ஒன்று கிடைத்துள்ளது.அதில் பாகிஸ்தான் இன்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் PIA என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த பலூனை போலீஸார் உடனடியாக கைப்பற்றினர்.இந்த பிஐஏ பலூன் விமானப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானதும் பல்வேறு கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.

சோட்ராசக் கிராமத்தில் இந்த வெள்ளை, பச்சை நிற பலூன் விமானத்தை பார்த்த மக்கள் வாசிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.மேலும் ராஜ்பாக் போலீஸ் விரைந்து வந்து பலூனைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.