பொங்கல் பரிசுக்கான டோக்கனில் அதிமுக கட்சி சின்ன இடம்பெறாது

பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கனில் அதிமுக தலைவர்களின் படம் மற்றும் சின்னம் இடம்பெறாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

பொங்கல் பரிசுக்கான டோக்கனில் அதிமுக கட்சி சின்னம், தலைவர்களின் படங்களை நீக்கக்கோரி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இதைப் பதிவு செய்த உயர் நீதிமன்றம் இவ்வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.