இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தொற்று மேலும் பரவுவதை தடுக்க தடுப்பூசி மிக அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று பரவல், தடுப்பூசி பணிகள், கருப்பு பூஞ்சை பாதிப்பு மற்றும் கரோனா 3-வது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
கரோனா 3-வது அலை வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். 26,325 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை புதிதாக நியமனம் செய்ததன் மூலம் 3-வது அலையையும் திறமையாக எதிர்கொள்வோம்.
தற்போது வரை ஆந்திர மாநிலத்தில் 1,955 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் முதியோருக்கு ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் கரோனா தடுப்பூசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.



