17 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவில் வாசல் !

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.இந்த கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு மூடப்பட்ட வடக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய 4 திசைகளிலும் வாசல்கள் உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வடக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் மூடப்பட்டன.

கிழக்கு பகுதியில் உள்ள வாசல் வழியாக மட்டும் பக்தர்கள் கோயிலுக்குள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நெல்லையப்பர் கோயிலில் ஆய்வு செய்த பொது, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலின் வடக்கு,மேற்கு, தென்புற நுழை வாயில்கள் விரைவில் திறக்கப்படும் என கூறினார்.

தற்போது,அந்த 3 வாசல்களும் சுத்தம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பித்து திறக்கப்பட்டன.திறக்கப்பட்ட 3 வாசல்கள் வழியாக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.பாதுகாப்பு கருதி 4 வாசல்களிலும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.