அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முகக்கவசங்கள் தரமற்றது

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முகக்கவசங்கள் பாதுகாப்பானதாக இல்லாமல், தரமற்றதாக இருந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழகத்தில் கோவிட் வைரஸ் பரவல் கடந்தாண்டு மார்ச்சில் துவங்கியது. கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது, ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 2 முகக்கவசங்கள் வீதம் இலவசமாக வழங்கப்பட்டது. துவைத்து பயன்படுத்தும் வகையில் துணியால் ஆன முகக்கவசங்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டன. இந்த முகக்கவசங்கள் தரமற்றதாக உள்ளதாக புகார் எழுந்தது.

தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை அமைச்சர்கள் தெளிவுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாப்பான முகக்கவசங்களை வழங்காமல், தரமற்றதை வழங்கியுள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. நாடா துணியில் தயாரித்த மாஸ்கை வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்