நடிகை ஷாலினி பிறந்தநாள் இன்று !

நடிகை ஷாலினி தமிழ் ,மலையாளம் பட மொழிகளில் நடித்துள்ளார்.நவோதயா ஸ்டுடியோவால் தயாரிக்கப்பட்ட 1983 ஆம் ஆண்டு என்டே மாமட்டிக்குட்டியம்மாக்கு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அவர் தனது மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.காதலுக்கு மரியாதை, அமர்க்களம் மற்றும் அலை பாயுதே ஆகியவை சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.ஷாலினி அஜித்துடன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அலைபாயுதே படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்.ஏப்ரல் 24, 2000 அன்று சென்னையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அஜித் இந்துவாகவும், ஷாலினி கிறிஸ்துவராகவும் இருந்ததால், இரு மத முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இப்போது அவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்