நடிகை சங்கீதா க்ரிஷ் பிறந்தநாள் இன்று !

நடிகை சங்கீதா தமிழ் ,தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.தமிழில் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக இருந்தார்.சங்கீதாவின் பாட்டனார் கே. ஆர் பாலன் திரைப்படத் தயாரிப்பாளர், 20க்கு மேற்பட்ட தமிழ்ப்படங்களை தயாரித்திருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு, பிப்ரவரி முதலாம் தேதி அன்று திருவண்ணாமலைக் கோவிலில், தமிழ்ப் பின்னணிப் பாடகரான கிரிஷை சங்கீதா திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் தொகுப்பாளராக இருந்துள்ளார்.இன்று தனது பிறந்தநாளை காண்கிற சங்கீதா க்ரிஷ் அவர்களுக்கு நியூஸ் நெஸ்ட் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்.

இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !