சமந்தாவின் ட்வீட் மற்றும் அவருக்கு அதரவு தெரிவிக்கும் நடிகைகள் !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.இவருக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன் இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் உள்ளன.

சமீபகாலமாக இவர்கள் திருமணத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகின.மேலும் சமந்தா பேமிலி மேன் சீரிஸ் நடித்ததற்கு பல கருத்துகள் எழுந்தன.

மேலும் சில நாட்களுக்கு முன்பு சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.இவர்கள் பிரிவதாக அறிவித்த பிறகு பலதர பட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

மேலும் சமந்தா ஒரு பதிவில் விவாகரத்து என்பது வலிமிகுந்தது. நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.இதிலிருந்து மீண்டுவர எனக்கு நேரம் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.இந்த பதிவிற்கு நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.