Actress Rohini: சாதி பாகுபாடு காரணமாகத்தான் வன்கொடுமை அதிகரிக்கிறது- நடிகை ரோகிணி

actress-rohini-says-this-is-the-perfect-way-to-prevent-harassment
நடிகை ரோகிணி

Actress Rohini: பாலியல் குற்றங்களை தடுக்க பெண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் அனைத்தையும், ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தால் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும் என்று நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில், எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம் சார்பில், மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘அக்னி சிறகே’ என்ற தலைப்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவில் திரைப்பட நடிகை ரோகிணி பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“சமூகத்தில் பெண்கள் மீதான தவறான பார்வையின் நீட்சிதான் பாலியல் வன்கொடுமை போன்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது. அடுத்த தலைமுறையினர் பெண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் அனைத்தையும், ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தால் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும்.

குழந்தைகளை பெற்றோர்கள் சிறுவயதில் எப்படி வளர்த்தார்களோ அதேபோல் முதுமையிலும் நாம் அவர்களை பார்த்துக்கொண்டால் முதியோர் இல்லங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. சாதி பாகுபாடு காரணமாகத்தான் வன்கொடுமை அதிகரிக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமென்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய புரிதல் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: TN School Students: தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு