TN School Students: தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

international-institute-of-tamil-studies-announcement-regarding-admission-with-scholarship
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

TN School Students: தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது.

இதையடுத்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் பள்ளிகளில் பல்வேறு புது புது செயல் திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்து வருகிறார். அதன்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்படும் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் மற்றும் பெற்றோர், பொதுமக்களின் பங்கேற்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி மார்ச் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் 37,391 அரசுப் பள்ளிகளில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் மொத்தம் 52 லட்சம் பெற்றோர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு செய்வது தமிழகத்தில் இதுவே முதல் முறை ஆகும்.

இதையும் படிங்க: Corona virus: தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் போன்றவற்றில் பள்ளி மேலாண்மை குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, புதிய பள்ளி மேலாண்மைக் குழு செயல்படத் தொடங்கும். இந்த குழுவில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர்தான் பள்ளிமேலாண்மைக் குழுவின் தலைவராக இருக்க வேண்டும். அவர்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டு உள்ளது. இதில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் பெற்றோர் துணைத்தலைவராக இருக்க வேண்டும். இவ்வாறு இக்குழுவின் அனைத்து படிநிலைகளிலும் உறுப்பினர்களாக வருவதற்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: MK Stalin: சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் ஆட்சி திமுக ஆட்சி -முதல்வர் ஸ்டாலின்