நடிகை நிவேதா பெத்துராஜ் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி !

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ் .இதை தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தவர்.

அவர் ஆன்லைன் மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாட்டை ஆர்டர் செய்ததாகவும், சாப்பாட்டை சாப்பிட முயன்றபோது அதில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் டெலிவரி செய்யப்பட்டதை பிரித்தபோது உணவில் ஒரு கரப்பான் பூச்சியைக் கிடந்தது. ஏற்கனவே இதே போல் ஒருமுறை நடந்துள்ளது. தற்போது 2-வது முறையாகும். உணவு கொண்டு வருவதில் சுகாதாரம் இல்லை என்று கூறியுள்ளார்.