நடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை காலமானார் !

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானவர்.விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

மேலும் எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி, உப்புக்கருவாடு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில், தன்னுடைய 54 வயதான தந்தை சிவசாமி மரணமடைந்து விட்டதாக அறிவித்துள்ளார். அதில் அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க : இயக்குனர் மிஸ்கின் பிறந்தநாள் இன்று !