சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் நாயகிக்கு டும் டும் டும் !

மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். இவர் தமிழில் ‘சிவப்பு மஞ்சள் பிச்சை’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில்சித்தார்த்துக்கு மனைவியாகவும், ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாகவும் சிறப்பாக நடித்திருப்பார்.

மேலும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

தற்போது, லிஜோமோல் ஜோஸ் திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர் அருண் ஆண்டனி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது இவரின் திருமணப் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.மேலும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் லிஜோமோலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !