என்னது இந்த நடிகர் தான் சமந்தா விவாகரத்துக்கு காரணமா !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.தெலுங்கு நடிகர் நாகசைதன் மற்றும் சமந்தா இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் உள்ளன.

தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்துள்ளனர்.இதனை நடிகை சமந்தா அதிகார பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாய் கொடுக்க நாக சைதன்யாவின் குடும்பம் முன் வந்ததாகவும் அதை சமந்தா ஏற்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தற்போது இவர்கள் விவாகரத்து குறித்து நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர்கள் விவாகரத்து குறித்து பதிவிட்டுள்ள நடிகை கங்கனா சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கங்கனா கூறிருப்பது யார் என்றால் அமீர் கான்.சமீபத்தில் நாக சைதன்யா அமீர்கானுடன் இணைந்து ”லால் சிங் சட்டா” என்ற படத்தில் நடித்துள்ளனர்.