நடிகை ஜோதிகா பிறந்தநாள் இன்று !

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக பல வருடங்கள் திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா.அவரது சுட்டித்தனமான நடிப்பு மக்களை வெகுவாக ஈர்த்தது.

குஷி ,காக்க காக்க போன்ற படங்களில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கொண்டுவந்தவர்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘சந்திரமுகி படத்தில் இவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினர்.ராதா மோகன் இயக்கத்தில் ‘மொழி’ திரைப்படத்தில் பேசும் திறனற்ற பெண்ணாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

நடிகர் சூர்யாவைக காதலித்த ஜோதிகா 2007-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.இந்த படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.அதன் பின்பு,ராட்சசி,தம்பி,ஜாக்பாட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே படம் வெளியாகியுள்ளது.