சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான, சின்னத்திரை நடிகை சித்ரா இன்று (டிச. 09) அதிகாலை சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 28 வயதான அவருக்கு ஜனவரி மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. 

சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் அவர் நேற்று தங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன் தான் சித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபரை தான் அவரது பெற்றோர் பார்த்து சித்ராவிற்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து இருந்தனர்.

தற்போது சித்ராவின் திடீர் தற்கொலை அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்து உள்ள நிலையில் பலரும் அதனை சமூக வலைத்தளங்களில் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.