நடிகர் விஷாலின் பிறந்தநாள் இன்று !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருக்கு விஷால் ஒருவர்.இவர் ஆகஸ்ட் 29 1977 ம் ஆண்டு பிறந்தவர்.நடிகர் விஷால் செல்லமே என்ற திரைப்படத்தில் கடந்த 2004ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமானார்.இவர் தந்தை திரைப்பட தயாரிப்பாளர்.

சினிமாவில் விஷாலின் சண்டைக்காட்சிகள் மிக அற்புதமாக இருக்கும்.மேலும் ஆரம்பத்தில் வெளியான செல்லமே,சண்டக்கோழி ,சிவப்பதிகாரம்,தாமிரபரணி போன்ற படங்கள் இவருக்கு ரசிகர் கூட்டத்தை வாங்கி தந்தன.

மேலும் இவர் தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.இயக்குனர் பாலா இயக்கத்தில் “அவன் இவன்” திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

விஷால் துப்பறிவாளன், இரும்பு திரை, அயோக்யா போன்ற படங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.இந்நிலையில் ஆகஸ்ட் 29 ஆம் தேதியான இன்று விஷால் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.