நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் விமர்சனங்களை நீக்க மேல்முறையீடு செய்துள்ளார். !

நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

சென்னை ஹைகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. விஜய் 20% நுழைவு வரியை செலுத்திவிட்டு காரை பயன்படுத்தலாம் என்று கூறியது.

இந்த நிலையில்தான் தற்போது இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வந்துள்ளது.அந்த உத்தரவில்,மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்பதைக்கூட மனுவில் குறிப்பிடாமலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது.

பொதுமக்கள் செலுத்தும் வரியின் மூலமாகக் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டே நாட்டு மக்களின் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

மேலும் வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும். மேலும் அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கிறேன் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது ,ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.