தமிழகத்தில் ஜூலை 31 வரை தொடரும் ஊரடங்கில் இவைகளுக்கு தடை நீட்டிப்பு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதனால் மாநில அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமலில் வைத்துள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைந்து வருகிறது.ஆனால் உலக சுகாதார அமைப்பு மூன்றாம் அலை தொடக்கத்தில் உள்ளோம் என்று எச்சரித்து உள்ளது.

இந்த ஊரடங்கில் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 31-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக) செயல்படத் தடை, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை,அனைத்து மதுக்கூடங்கள் திறக்க அனுமதி இல்லை, நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி இல்லை, பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படத் தடை, உயிரியல் பூங்காக்கள் திறக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.