நடிகர் சூர்யா மாணவர்களுக்கு கூறிய அறிவுரை !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருள் ஒருவர் சூர்யா.தற்போது சூர்யா மாணவர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவ படிப்பு சேருவதற்கு நீட் தேர்வு வைக்கப்படுகிறது.தமிழகத்தில் நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற காரணத்தினால் மாணவர்கள் இறந்துள்ளனர்.இது மிகவும் வேதனைக்குரிய செய்தி.

இது குறித்து மாணவர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள கூடாது என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடும் வீடியோவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மாணவ, மாணவியர் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்

உயிரை விட ஒரு பரீட்சை பெரிதல்ல.மனது கஷ்டமாக இருந்தால் நண்பர்கள், பெற்றோரிடம் மாணவர்கள் மனம்விட்டு பேச வேண்டும். நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கடந்த 24 மணிநேரத்தில் 1,653 பேருக்கு கொரோனா !