நிலம் வாங்கி தருவதாக கூறி 2.70கோடிமோசடி – நடிகர் சூரி புகார்

நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக விஷ்ணு விஷாலின் தந்தை உள்பட இருவர் மீது நடிகர் சூரி புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டை விஷ்ணு விஷால் மறுத்திந்தார்.

இதற்கிட்டையே இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிவந்த நிலையில், நடிகர் சூரி தனக்கு நேர்ந்த மோசடி தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, பின்னர் நிலம் வாங்கச்சென்று பல கோடி ரூபாயை ஏமாந்துள்ளேன். ஏமாற்றப்பட்டுள்ளேன். ஒன்னும் பிரச்னை இல்லை, வெளியே எதுவும் சொல்ல வேண்டாம் என்று கூறி, பணத்தை திருப்பி அளிப்பதாக அவர்கள் கூறினர்.

ஆனால், அவர்கள் மீது நம்பிக்கை இழந்தேன். பணத்தை திருப்பித் தரும் எண்ணத்திலேயே அவர்கள் இல்லை. நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது அந்த போன் வரும். அதன்பின் என்னால் நடிக்கவே முடியாது. என்னுடைய திறமை எல்லாத்தையும் தொலைத்துவிட்டேன். 5 வருடங்களாக கஷ்டப்படுகிறேன். சாமியை நம்புனேன். நல்ல முடிவு கிடைக்கவில்லை. இப்ப கோர்ட்தான் எனக்கு தெய்வம்” என்று மிக வேதனையுடன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.