Saani Kaayidham: ஓடிடியில் செல்வராகவனின் ‘சாணிக்காயிதம்’

Actor-selvaraghavan-SaaniKaayidham-Releasing-Directly-On-Prime-Video
சாணிக்காயிதம்

Saani Kaayidham: செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகும் ’சாணிக்காயிதம்’ படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

’ராக்கி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ’சாணிக்காயிதம்’ படத்தில் இயக்குநர் செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். 80-கால பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் ‘சாணிக்காயிதம்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்த நிலையில், படத்தை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட், அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் படம் வரும் மார்ச் 25 அல்லது ஏப்ரல் 1 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளன. விஜய்யின் ‘பீஸ்ட்’, தனுஷின் ‘நானே வருவேன்’, மோகன் ஜியின் பெயரிடாதப் படங்களிலும் செல்வராகவன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Corona virus: தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு