பிரபல சின்னத்திரை நடிகர் ராம்கி உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். மூத்த நடிகரான இவர் சுமார் 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பல டிவி தொடர்களில் நடித்துள்ளவர் ராம்கி. சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சுமார் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராம்கி நேற்று மாலை உயிரிழந்தார். அவரின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்கியின் மறைவிற்கு மேடை நாடக கலைஞர்கள், சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.