தமிழ் சினிமாவில் பார்க்க பக்கத்துக்கு வீட்டு பையன் போல் இருப்பவர் தன் நடிகர் பிரசன்னா.இவர் தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘அஞ்சாதே’ படத்தின் வில்லனாக நடித்திருப்பார் இந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
திருச்சியில் பிறந்து வளர்ந்தவரான பிரசன்னா பொறியியல் பட்டம் பெற்றவர்.மேலும் கதையின் நாயகனாக மட்டும் இல்லாமல் இரண்டாம் கதாநாயகன், கதையின் நாயகன், துணைக் கதாபாத்திரம் போன்றவைகளில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்துவர்.
2009ஆம் ஆண்டு ’அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா இருவரும் சேர்ந்து நடித்தனர்.அதன் பின் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு விஹான் என்ற மகனும்,ஒரு மகளும் உள்ளனர்.



