உலகின் மிக உயரமான மலையில் தேசியக்கொடியுடன் ஏறிய தமிழ் நடிகை!

உலகின் மிக உயரமான மலை என்று கூறப்படும் கிளிமஞ்சாரோ மலையில் ஏறி தமிழ் நடிகை ஒருவர் சாதனை செய்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

டான்சானியா நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கிளிமஞ்சாரோ மலை ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமின்றி உலகிலேயே மிக உயரமாக உள்ள தனி மலை என்பது குறிப்பிடத்தக்கது, கிளிமஞ்சாரோ மலை இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது அதிக உயரம் அதிகம் இல்லை. என்றாலும் இந்த மலை தான் உலகில் உள்ள தனிமலைகளில் மிக உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிளிமஞ்சாரோ மலையில் ஏற வேண்டும் என பல மலையேற்ற வீரர்களின் கனவாக இருந்து வரும் நிலையில் பிரபல தமிழ் நடிகை நிவேதா தாமஸ் இந்த மலையில் ஏறி சாதனை செய்துள்ளார்.

கிளிமஞ்சாரோ மலையின் உச்சிக்கு சென்று தேசியக்கொடியை வைத்திருக்கும் புகைப்படத்தை நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள நிவேதாமஸ் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: