பாஜக இல் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி – நெருக்கடியில் இருக்கும் மம்தா !

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில் ,மம்தாஜி தலைமையில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தனது பலத்தை மெல்ல மெல்ல இழக்கிறது.இந்த கட்சியில் இருக்கும் தலைவர்கள் பாஜக வில் இணைத்து வருகின்றனர்.தற்போது,நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வங்காள தேர்தல் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது ,பாஜகவில் சேர்ந்த பிறகு, கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் சேர்ந்த மிதுன் சக்ரவர்த்தி பேசியது, உங்கள் உரிமைகளை யார் பறிக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நாங்கள் நிற்போம் என்றார்.

70 வயதாகும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர். ஆனால், அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.