நடிகர் காதல் சுகுமாருக்கு டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து கொலை மிரட்டல் விடுத்ததாக சுகுமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ஜி.பி.முத்து,ரவுடி பேபி சூர்யா, இலக்கியா போன்றவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆபாசமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் என்று காதல் சுகுமார் மற்றும் சில திரைத்துறையினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
தற்போது நெல்லை சங்கர், சேலம் மணி, ஜி. பி. முத்து ஆகியோர் சமூக வலைதளம் மூலமாக காதல் சுகுமாருக்கு மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காதல் சுகுமார் புகார் அளித்துள்ளார்.



